Swiss News In Tamil

கன்டோன் சுக்கில் உள்ள பண்ணை வீட்டில் தீ விபத்து.!

கன்டோன் சுக்கில் உள்ள வார் நகரத்திலுள்ள மரத்தால்ஆன வீடு ஒன்று பாரிய தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 முப்பது அளவில் இடம்பெற்றுள்ளது.

மக்கள் வசிக்காத மரத்தால் அமைக்கப்பட்டிருந்த ஒரு பண்ணை வீடே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இவ்விபத்தில், நபர்களுக்கோ விலங்குகளுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரவிக்கப்படுகிறது.

கன்டோன் சுக்கில்
(c) Kantonal Polizei Zug

தீயை கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்பு வீரர்கள் சுமார் 105 பேர் வரையில் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சொத்து சேதம் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.