Saturday, 19 September 2026
Swiss News In Tamil

சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்

சுவிஸ் பனிச்சறுக்கு விடுதியில் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர் ஆல்ப்ஸில் உள்ள மிக ஆடம்பரமான ஸ்கை ரிசார்ட்டுகளில் ஒன்றான ணுநசஅயவவ இன் சுகைகநடடிநசப பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும்காற்று மற்றும் சீரரற்ற காலநிலை தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்த நிலையிலும் இந்த துயர சம்பம் இடம்பெற்றுள்ளது.

சுவிஸ் பனிச்சறுக்கு

மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் பாரிய மீட்பு பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் கன்டோன் போலீசார் மூன்று பேர் இறந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் உறுதி செய்யப்பட்டு செய்தி வெளியிட்டிருந்தனர்.

இதனைதொடர்ந்து தேடுதல் ‘இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று காரணமாக உயரமான மலைப்பிரதேசங்களில் அபாயநிலை காணப்படுவதாக தொடர்ந்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பனிச்சரிவு ஏற்படும் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளியும் சமூகவலைத்தளங்களில் வைலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.