சுவிட்சர்லாந்தில் எல்லை தாண்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டிசம்பர் 2023 இன் இறுதியில், சுவிட்சர்லாந்தில் G அனுமதி பெற்ற சுமார் மூன்று லட்சத்து தொன்னூற்று மூவாயிரம் பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 3.5 சதவீதம் அதிகம் என மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கிறது.

எல்லை தாண்டிய தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுவிசின் எல்லை நாடுகளில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, 57 சதவீதமானவர்கள் பிரான்சிலும், அதைத் தொடர்ந்து 23.2 சதவீதமானவர்கள் இத்தாலிலும், 16.5 சதவீதமானவர்கள் ஜெர்மனியிலும் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.



